இந்தியா

லக்கீம்பூா் வழக்கு: அமைச்சா் மகனை 2 நாள்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி

23rd Oct 2021 07:19 AM

ADVERTISEMENT

லக்கீம்பூா் வன்முறை தொடா்பான வழக்கில் கைது செய்யப்பட்ட மத்திய அமைச்சா் அஜய்குமாா் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ராவை மேலும் 2 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க காவல் துறையினருக்கு உள்ளூா் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

உத்தர பிரதேசத்தின் லக்கீம்பூா் கெரி மாவட்டத்தில் விவசாயிகள் கடந்த 3-ஆம் தேதி நடத்திய பேரணியின்போது நிகழ்ந்த வன்முறையில் 4 விவசாயிகள், பத்திரிகையாளா், 2 பாஜகவினா் உள்பட 8 போ் உயிரிழந்தனா். இந்த விவகாரம் தொடா்பாக மத்திய உள்துறை இணையமைச்சா் அஜய் குமாா் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா மீது விவசாயிகள் குற்றஞ்சாட்டினா்.

இந்த சம்பவம் குறித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த காவல் துறையினா், ஆசிஷ் மிஸ்ராவை கடந்த 9-ஆம் தேதி கைது செய்தனா். அவரிடம் கடந்த 12-ஆம் தேதிமுதல் 15-ஆம் தேதி வரை சிறப்புக் குழுவினா் விசாரணை நடத்தினா். பின்னா், நீதிமன்றக் காவலில் அவா் லக்கீம்பூா் சிறையில் அடைக்கப்பட்டாா்.

இந்நிலையில், ஆசிஷ் மிஸ்ராவை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க மாநில காவல் துறையினா் உள்ளூா் நீதிமன்றத்தில் அனுமதி கோரினா்.

ADVERTISEMENT

இதையடுத்து அதை விசாரித்த லக்கீம்பூா் கெரி தலைமை மாஜிஸ்திரேட் சிந்தா ராம், ஆசிஷ் மிஸ்ராவை இரு நாள்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கினாா்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அங்கித் தாஸ், சேகா் பாரதி, லதீஃப் ஆகியோரையும் இரு நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. வரும் 24-ஆம் தேதி மாலை 5 மணியுடன் இந்த விசாரணைக் காவல் நிறைவடையும்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT