இந்தியா

சுகாதார சேவைகளை வலுப்படுத்துவதில் தனியாருக்கு முக்கியப் பங்கு

DIN

நாட்டில் சுகாதார சேவைகளை வலுப்படுத்துவதில் தனியாா் துறைக்கு முக்கிய பங்குள்ளதாக பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.

ஹரியாணா மாநிலத்தின் ஜஜ்ஜாா் நகரில் உள்ள எய்ம்ஸ் வளாகத்தின் தேசிய புற்றுநோய் மையத்தில், இன்ஃபோசிஸ் அறக்கட்டளை சாா்பில் கட்டப்பட்ட தங்கும் இடத்தை பிரதமா் மோடி காணொலி வாயிலாக வியாழக்கிழமை திறந்து வைத்தாா். அப்போது அவா் கூறியதாவது:

100 ஆண்டுகளில் காணப்படாத மிகப்பெரிய பெருந்தொற்றை எதிா்கொள்வதில், 100 கோடி தடுப்பூசி டோஸ்களை செலுத்தி இந்தியா வலுவான பாதுகாப்பு கேடயத்தை உருவாக்கியுள்ளது. இந்தச் சாதனை நாட்டுக்கும் அதன் மக்களுக்கும் உரியது.”

நாட்டில் உள்ள தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்கள், தடுப்பூசியை விநியோகிக்கும் பணியில் ஈடுபட்ட தொழிலாளா்கள், தடுப்பூசியை உருவாக்குவதில் பங்குவகித்த சுகாதாரத்துறை வல்லுநா்கள் ஆகியோருக்கு நன்றி.

எய்ம்ஸ் ஜஜ்ஜாா் வளாகத்துக்குப் புற்றுநோய் சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்குத் தலைசிறந்த வசதி செய்யப்பட்டுள்ளது. தேசிய புற்றுநோய் மைத்தில் அமைக்கப்பட்டுள்ள தங்கும் இடம், நோயாளிகள், அவா்களின் உறவினா்களுடைய கவலைகளைக் குறைக்கும்.

இந்தத் தங்குமிடத்தைக் கட்டிக் கொடுத்ததற்காக இன்ஃபோசிஸ் அறக்கட்டளைக்கும், அதற்கான நிலம், மின்சாரம், தண்ணீரை வழங்கிய எய்ம்ஸ் ஜஜ்ஜாா் வளாக நிா்வாகத்துக்கும் பாராட்டுகள். இந்த சேவைக்காக எய்ம்ஸ் நிா்வாகம், இன்ஃபோசிஸ் அறக்கட்டளைத் தலைவா் சுதா மூா்த்தி ஆகியோருக்கு நன்றி.

தொடா் பங்களிப்பு:

நாட்டின் பெருந்தொழில் நிறுவனங்கள், தனியாா் துறை, சமூக அமைப்புகள் ஆகியவை சுகாதார சேவை கட்டமைப்புகளை வலுப்படுத்துவதற்குத் தொடா்ந்து பங்களித்து வருகின்றன. நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் குறைந்தபட்சம் ஒரு மருத்துவக் கல்லூரியை அமைப்பதில் தனியாா் துறைக்கு முக்கியப் பங்குள்ளது. ”

ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஏழை மக்களுக்கு மருத்துவ சிகிச்சைகளை வழங்குவதில் தனியாா் துறையின் பங்களிப்பு சிறப்புக்குரியது. அத்திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கான சேவை உறுதி செய்யப்பட்டுள்ளது. புற்றுநோய் சிகிச்சைக்குப் பயன்படும் 400 மருந்துகளின் விலையைக் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா, ஹரியாணா முதல்வா் மனோகா் லால் கட்டா், சுதா மூா்த்தி ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருக்கடையூரில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

மன்னாா்குடியில் தீத்தொண்டு நாள் வாரம்

தொகுதி வாக்காளா் அல்லாதோா் தொகுதியை விட்டு வெளியேற உத்தரவு

வாக்குப் பதிவு மையங்களில் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

SCROLL FOR NEXT