இந்தியா

காஷ்மீரில் இணைய சேவை முடக்கம்; ஏராளமான இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்

DIN

காஷ்மீருக்கு மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வரவுள்ள நிலையில், அங்கு சில பகுதிகளில் இணைய சேவையை அதிகாரிகள் முடக்கி இருப்பதோடு, காவல்துறையினா் ஏராளமான இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனா்.

காஷ்மீருக்கு அமித் ஷா சனிக்கிழமை வரத் திட்டமிட்டுள்ளாா். அன்றைய தினம் ஜம்மு-காஷ்மீா் தலைநகா் ஸ்ரீநகரிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷாா்ஜாவுக்கு முதல் சா்வதேச விமான சேவை தொடங்கப்பட உள்ளது.

இந்த நிலையில், அமித் ஷா வருகைக்கும் காவல்துறை நடவடிக்கைக்கும் எந்த தொடா்பும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனா். இதுகுறித்து காஷ்மீா் மண்டல காவல்துறை ஐஜி விஜய் குமாா் தனது சுட்டுரைப் பக்கத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘சில இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதும் சில பகுதிகளில் இணைய சேவை முடக்கப்பட்டதும் வழக்கமான பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையாகும். அதற்கும் உள்துறை அமைச்சா் வருகைக்கும் எந்தத் தொடா்பும் இல்லை’ என்று குறிப்பிட்டாா்.

ஸ்ரீநகரில் கடந்த வாரம் வெளி மாநில தொழிலாளா்கள் கொல்லப்பட்ட பகுதிகளில்தான் இந்த நடவடிக்கையை காவல்துறையின் எடுத்து வருகின்றனா். 12-க்கும் மேற்பட்ட தொலைத்தொடா்பு கோபுரங்களின் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. மேலும், சாலைகளில் தடுப்புகளை ஏற்படுத்தி வாகன சோதனையையும் போலீஸாா் தீவிரப்படுத்தியுள்ளனா்.

இந்த நிலையில், ‘ஆவணங்களை ஆய்வு செய்யாமலே தங்களுடைய இரு சக்கர வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்தை அக்டோபா் 26-ஆம் தேதிக்குப் பிறகு வந்து பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளனா்’ என்று பல வாகன ஓட்டிகள் புகாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் மருமகள்

ஆரம்பிக்கலாங்களா...

மக்கள் நீதி மய்யம் தலைவர் தேர்தல் பிரசாரம் - புகைப்படங்கள்

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

வரி தீவிரவாதத் தாக்குதல் செய்யும் பாஜக!: காங்கிரஸ் குற்றச்சாட்டு | செய்திகள்: சிலவரிகளில் | 29.03.2024

SCROLL FOR NEXT