இந்தியா

மும்பையில் 61 அடுக்குமாடிக் குடியிருப்பில் பயங்கர தீ விபத்து

22nd Oct 2021 01:23 PM

ADVERTISEMENT


மும்பை: மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் 61 அடிக்குமாடியைக் கொண்ட குடியிருப்பில் இன்று முற்பகலில் பயங்கர தீ விபத்து நேரிட்டது.

கர்ரே சாலையில் அமைந்துள்ள ஒன் அவிக்னா பூங்கா கட்டடத்தின் 19வது மாடியில் இன்று முற்பகலில் பயங்கர தீ விபத்து நேரிட்டது.

இதையும் படிக்கலாமே.. கதையல்ல நிஜம்: ஆறு மகள்களையும் மருத்துவர்களாக்கிய கேரள தம்பதி

இது குறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கட்டடத்துக்குள் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணியும் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

தீ விபத்தில் சிக்கியவர்களின் நிலை குறித்து இதுவரை  எந்தத் தகவலும் இல்லை. சுமார் 12 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
 

Tags : mumbai fire broke out
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT