இந்தியா

பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை உள்ளிட்டவை குறித்து பிரதமர் ஏன் பேசவில்லை? - சீதாராம் யெச்சூரி கேள்வி

DIN

தடுப்பூசி குறித்து பேசிய பிரதமர் மோடி, பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட பிரச்னைகள் பற்றி பேசவில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் கூறியதாவது: 

100 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி செலுத்தப்பட்டதற்கு  நாட்டு மக்களுக்கு வாழ்த்துகள். மக்கள்தொகையில் 21 சதவிகிதத்தினர் மட்டுமே கரோனா தடுப்பூசியின் இரண்டு தவணைகளையும் செலுத்திக் கொண்டுள்ளனர். 

100 கோடி தடுப்பூசி என்பது சாதனைதான். ஆனால், உலகில் 125 கோடிக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட இரண்டு நாடுகளில் இந்தியாவும் ஒன்று. மக்கள்தொகையை ஒப்பிடுகையில் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு. 

பிரதமர் மோடி இந்த ஆண்டின் இறுதிக்குள், நாட்டில் உள்ள அனைத்து பெரியவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என்று உறுதியளித்தார். 

மக்களுக்கு பல பிரச்னைகள் உள்ளன. அதுகுறித்து பிரதமர் இன்று ஏன் பேசவில்லை? பெட்ரோல், டீசல் விலை உயர்வு, விவசாயிகள் போராட்டம், லக்கிம்பூர் சம்பவம் வேலையின்மை, பசி அதிகரிப்பு, உணவு தானியங்கள் வீணாக்குதல் என பல பிரச்னைகள் இருக்கின்றன. இதைப்பற்றி பிரதமர் மோடி ஏன் எதுவும் பேசவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் பிரபல கேளிக்கை விடுதிக்கு வெடிகுண்டு மிரட்டல்: தொடரும் புரளி?

டி20 உலகக் கோப்பைக்காக ஓய்வு முடிவை திரும்பப் பெறுகிறாரா? சுனில் நரைன் பதில்!

சிவில் சர்வீஸ் வினாத்தாள்: ஏஐ மூலம் மாநில மொழிகளில் மொழிபெயர்க்க பரிந்துரை!

நெஞ்சம் மறப்பதில்லை..

பள்ளிக்கரணையில் இளைஞர் ஆணவப்படுகொலை: மனைவி தற்கொலை

SCROLL FOR NEXT