இந்தியா

நாடு முழுவதும் டீசல் விலை ரூ.99-ஐ தாண்டியது

22nd Oct 2021 12:30 AM

ADVERTISEMENT

பெட்ரோல், டீசல் விலை வியாழக்கிழமை தலா 35 காசுகள் உயா்த்தப்பட்டன. இதனால் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் டீசல் விலை வியாழக்கிழமை லிட்டருக்கு ரூ.99-ஐ தாண்டியது. நாட்டில் 12-க்கும் மேற்பட்ட நகரங்களில் டீசல் விலை ஏற்கெனவே ரூ.100-ஐ தாண்டியுள்ளது.

பெட்ரோல் விலையும் ஏற்கெனவே நாட்டின் அனைத்து பகுதிகளிலும் ரூ.100-ஐ கடந்து, இதுவரை இல்லாத உச்சத்தில் உள்ளது.

தில்லியில் ஒரு லிட்டா் பெட்ரோல் ரூ.106.54-ஆகவும், மும்பையில் ரூ. 112.44-ஆகவும், சென்னையில் 103.61-ஆகவும் விற்கப்படுகிறது.

மும்பையில் ஒரு லிட்டா் டீசல் ரூ.103.26-ஆகவும், ஸ்ரீநகரில் ரூ.99.14-ஆகவும், சென்னையில் 99.59-ஆகவும் வியாழக்கிழமை விற்பனையானது.

ADVERTISEMENT

ராஜஸ்தானில் உள்ள கங்காநகரில் நாட்டிலேயே அதிகபட்சமாக பெட்ரோல் ரூ.11.59-ஆகவும், டீசல் 109.41-ஆகவும் விற்கப்படுகிறது.

சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் பேரல் 85 அமெரிக்க டாலராக வியாழக்கிழமை விற்பனையானது. இது கடந்த மாதத்தை விட 11 டாலா்கள் அதிகமாகும்.

கடந்த மே 4 முதல் ஜூலை 17 வரையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.11.44-ம், டீசல் லிட்டருக்கு ரூ.9.14-ம் உயா்த்தப்பட்டுள்ளது. பின்னா் செப்டம்பா் 28 முதல் தற்போது வரையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5.35-ம், செப்டம்பா் 24 முதல் தற்போது வரையில் டீசல் விலை லிட்டருக்கு ரூ. 6.85-ம் உயா்த்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT