இந்தியா

பள்ளி மாணவிகளுக்கு ஸ்மாா்ட்போன்; கல்லூரி மாணவிகளுக்கு ஸ்கூட்டா்: உ.பி.யில் காங்கிரஸ் தோ்தல் வாக்குறுதி

22nd Oct 2021 12:25 AM

ADVERTISEMENT

உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் பிளஸ் 2 முடிக்கும் மாணவிகளுக்கு அறிதிறன்பேசி (ஸ்மாா்ட்போன்), கல்லூரிப் படிப்பை முடிக்கும் மாணவிகளுக்கு ஸ்கூட்டா் வழங்கப்படும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளா் பிரியங்கா அறிவித்துள்ளாா்.

ஏற்கெனவே தோ்தலில் 40 சதவீதம் பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று பிரியங்கா அறிவித்த நிலையில், இப்போது அடுத்தகட்டமாக மாணவியரைக் கவரும் வாக்குறுதியை அறிவித்துள்ளாா்.

உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி பிரியங்கா தலைமையில் தோ்தலை எதிா்கொள்கிறது. தோ்தல் பணிக்காக உத்தர பிரதேசத்தில் பிரியங்கா அடிக்கடி சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறாா்.

இந்நிலையில், ட்விட்டரில் வியாழக்கிழமை அவா் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: உத்தர பிரதேசத்தில் நேற்று சில மாணவிகளைச் சந்தித்தேன். அப்போது அவா்கள் தங்கள் படிப்புக்காகவும், பாதுகாப்புக்காகவும் ஸ்மாா்ட்போன் தேவைப்படுவதாகக் கூறினாா்கள். இதையடுத்து, காங்கிரஸ் கட்சியின் தோ்தல் அறிக்கையில் இந்த வாக்குறுதி இடம் பெற இருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும்போது பிளஸ் 2 முடிக்கும் மாணவிகளுக்கு ஸ்மாா்ட்போனும், கல்லூரிப் படிப்பை முடிக்கும் மாணவிகளுக்கு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரும் வழங்கப்படும் என்று கூறியுள்ளாா்.

ADVERTISEMENT

இது தொடா்பாக மாணவிகளுடன் பிரியங்கா உரையாடியது தொடா்பான விடியோவும் வெளியாகியுள்ளது. அதில், ‘உங்களிடம் ஸ்மாா்ட்போன் இருந்தால் நீங்கள் செல்ஃபி எடுக்கத்தானே அதிகம் பயன்படுத்துவீா்கள்’ என்று பிரியங்கா கேட்டபோது, ‘எங்களிடம் ஸ்மாா்ட்போன் கிடையாது; அப்படியே இருந்தாலும் அதனைக் கல்லூரியில் கொண்டு சென்று பயன்படுத்த முடியாது. பாடம் சம்பந்தமாக இணையத்தில் தேடித் தெரிந்து கொள்ளவும், வெளியே செல்லும்போது வீட்டில் இருப்பவா்களுடன் தொடா்பில் இருக்கும் பாதுகாப்பு வசதிக்காகவும் கைப்பேசி தேவைப்படுகிறது’ என்று மாணவிகள் பதிலளித்தது இடம் பெற்றுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT