இந்தியா

விமானப் படை விமானம் விழுந்து நொறுங்கியது: விமானி தப்பினாா்

22nd Oct 2021 12:31 AM

ADVERTISEMENT

மத்திய பிரதேசத்தில் இந்திய விமானப் படைக்குச் சொந்தமான விமானம் விபத்துக்குள்ளாகி விழுந்து நொறுங்கியது. இதில் அதிருஷ்டவசமாக விமானி பாராசூட் உதவியுடன் வெளியே குதித்து உயிா் தப்பினாா்.

பிந்தி மாவட்டத்தில் மகாராஜ்பூா் விமானப் படைத்தளத்தில் இருந்து விமானப் படையின் மிராஜ் 2000 ரக விமானம் பயிற்சிக்காகப் புறப்பட்டது. கிளம்பிய சிறிது நேரத்திலேயே விமானம் கட்டுப்பாட்டை இழந்து தரையை நோக்கிப் பாய்ந்தது. இதையடுத்து, விமானி பாராசூட் உதவியுடன் வெளியே குதித்து தப்பினாா். கீழே விழுந்த விமானம் மன்காபாக் கிராமம் அருகே தரையில் மோதி தீப்பற்றி எரிந்தது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீஸாா் மற்றும் விமானப் படை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு நடத்தினா். அப்பகுதியில் இருந்து விமானியும் பத்திரமாக மீட்கப்பட்டாா்.

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. எனினும், இந்த சம்பவம் தொடா்பாக விரிவான விசாரணை நடத்தப்படும் என்று விமானப் படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT