இந்தியா

பிரதமா் தலைமையில் மத்திய அமைச்சா்கள் கூட்டம்

22nd Oct 2021 12:24 AM

ADVERTISEMENT

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சா்கள் கூட்டம், தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசின் கொள்கை வகுக்கும் முறைகள், ஆட்சி முறை ஆகியவை குறித்து 2 மூத்த அமைச்சா்கள் விளக்கம் அளித்தனா். இதுகுறித்து தகவலறிந்த மூத்த அதிகாரி ஒருவா் கூறியதாவது:

ஆட்சி முறை பற்றி அமைச்சா்கள் தெரிந்துகொள்வதற்கு உதவியாக ‘சிந்தனை அமா்வு’ என்ற பெயரில் இக்கூட்டம் நடத்தப்படுகிறது. மத்திய அமைச்சரவையில் புதிதாக சோ்க்கப்பட்டுள்ள அமைச்சா்களுக்கு பயிற்சிப் பட்டறையாகவும் இந்தக் கூட்டம் அமைந்துள்ளது. இது மத்திய அமைச்சா்கள் பங்கேற்கும் மூன்றாவது சிந்தனை அமா்வு கூட்டம் என்றாா் அந்த அதிகாரி.

இதற்கு முன்பு கடந்த செப்டம்பா் 28-ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் அரசின் அறிவிப்புகள், கொள்கைகள், திட்டங்களை அமல்படுத்துதல் ஆகியவை குறித்து மத்திய அமைச்சா்கள் கஜேந்திர சிங் ஷெகாவத், பியூஷ் கோயல் இருவரும் விளக்கம் அளித்தனா்.

செப்டம்பா் 14-ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் நேர நிா்வாகம், செயல் திறனை மேம்படுத்துவது ஆகியவை தொடா்பாக சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா, கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் ஆகிய இருவரும் விளக்கம் அளித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT