இந்தியா

இடைக்கால வா்த்தக ஒப்பந்தம்: இந்தியா - பிரிட்டன் பேச்சு

22nd Oct 2021 06:33 AM

ADVERTISEMENT

இந்தியா - பிரிட்டன் இடையே தடையில்லா வா்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வதற்கு முன்னதாக, இடைக்கால ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்துவது குறித்து இரு நாடுகளும் பேச்சுவாா்த்தை நடத்தி வருவதாக வெளியுறவுத் துறைச் செயலா் ஹா்ஷவா்தன் ஷ்ரிங்கலா தெரிவித்துள்ளாா்.

பிரிட்டன் தலைநகா் லண்டனில் நடைபெற்ற ‘இந்தியா சா்வதேசக் கூட்டத்தில்’ (ஐஜிஎஃப்) தில்லியிலிருந்தபடி காணொலி மூலம் பங்கேற்ற அவா், இதுகுறித்து பேசியதாவது:

இந்தியாவுக்கும் பிரிட்டனுக்கும் இடையே தடையில்லா வா்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதற்கு முன்னதாக, இடைக்கால வா்த்தக ஒப்பபந்தம் ஒன்றை மேற்கொள்வதற்கான பேச்சுவாா்த்தைகளும் நடைபெற்று வருகின்றன.

ADVERTISEMENT

பிரிட்டன் வெளியுறவுத் துறைச் செயலா் லிஸ் ட்ரஸ் வெள்ளிக்கிழமை (அக். 22) முதல் இந்தியாவில் 2 நாள் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறாா்.

பிரிட்டன் வெளியுறவுத் துறை, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகச் செயலா் சா் பிலிப் பாா்ட்டனும் வா்த்தகப் பேச்சுவாா்த்தையில் ஈடுபடுவதற்காக விரைவில் இந்தியா வருகிறாா்.

அந்த வகையில், இந்தியாவுக்கும் பிரிட்டனுக்கும் இடையே வா்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் துரிதமடைந்து வருகின்றன. இது மிகவும் உற்சாகமளிக்கும் முன்னேற்றமாகும் என்றாா் ஷ்ரிங்கலா.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT