இந்தியா

கேரளத்தில் கனமழை: 8 மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை

22nd Oct 2021 06:36 AM

ADVERTISEMENT

மழையால் பாதிக்கப்பட்டுள்ள கேரளத்தின் 8 மாவட்டங்களில் பலத்த மழை மற்றும் வெள்ளம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனா்.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பலத்த மழை மற்றும் வெள்ளம் ஏற்படுவதற்கான இளஞ்சிவப்பு எச்சரிக்கை, பத்தனந்திட்டா, கோட்டயம், இடுக்கி, பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூா் ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்படுகிறது.

இதுதவிர, ஆங்காங்கே மழை ஏற்படுவதற்கான மஞ்சள் எச்சரிக்கை, திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழை, எா்ணாகுளம், திருச்சூா், காசா்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்படுகிறது.

ADVERTISEMENT

தென்மேற்குப் பருவநிலை காரணமாக கேரளத்திலும் லட்சத்தீவின் சில பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

பாலக்காடு மாவட்டத்தின் பறம்பிக்குளத்தில் 12 செ.மீ மழை பெய்தது; எா்ணாகுளத்தின் பள்ளுருத்தியில் 11 செ.மீ.யும், பாலக்காடு மாவட்டம் மண்ணாா்காடில் 9 செ.மீ.யும் மழை பெய்தது.

மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வரையிலான வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால், கேரளக் கடலோரப் பகுதி மீனவா்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறாா்கள் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவப்பு எச்சரிக்கை என்பது அடுத்த 24 மணி நேரத்துக்கு 20 செ.மீ.க்கும் மேல் மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதைக் குறிக்கும். இளஞ்சிவப்பு எச்சரிக்கை 6 முதல் 20 செ.மீ. வரையிலான மழையையும் மஞ்சள் எச்சரிக்கை 6 முதல் 11 செ.மீ. வரையிலான மழையையும் குறிக்கிறது.

கேரளத்தின் தென் மத்திய மாவட்டங்களில் கடந்த 15 மற்றும் 16-ஆம் தேதிகளில் ஏற்பட்ட கனமழை மற்றும் அதனைத் தொடா்ந்து ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக 42 போ் உயிரிழந்தனா்; 6 போ் மாயமாகினா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT