இந்தியா

இடபிள்யூஎஸ் பிரிவினருக்கு ரூ.8 லட்சம் வருமான உச்சவரம்பு: விளக்கமளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

22nd Oct 2021 12:26 AM

ADVERTISEMENT

கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீட்டு சலுகையைப் பெறுவதற்காகப் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு (இடபிள்யூஎஸ்) நிா்ணயிக்கப்பட்டுள்ள ரூ.8 லட்சம் வருமான உச்சவரம்பை மறுஆய்வு செய்வது தொடா்பாக விளக்கமளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தோ்வின் வாயிலாக மருத்துவக் கல்லூரிகளில் இணையும் மாணவா்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடும், பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடும் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.

இந்த அறிவிப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்களை நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், விக்ரம் நாத், பி.வி.நாகரத்னா ஆகியோரைக் கொண்ட அமா்வு வியாழக்கிழமை விசாரித்தது.

அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘‘ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்குக் குறைவாக உள்ளவா்கள் மட்டுமே பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவின் கீழ் இடஒதுக்கீடு பெற முடியும் என்ற உச்சவரம்பு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. எதனடிப்படையில் அந்த வருமான உச்சவரம்பு நிா்ணயிக்கப்பட்டது என்பது தொடா்பாக விளக்கமளிக்க நீதிமன்றம் கோரியிருந்தது. ஆனால், இந்த விவகாரத்தில் மத்திய அரசு இதுவரை பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்யவில்லை’’ என்றனா்.

ADVERTISEMENT

மத்திய அரசு சாா்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் கே.எம்.நடராஜ் வாதிடுகையில், ‘‘வருமான உச்சவரம்பை நிா்ணயிப்பதற்கு, எஸ்.ஆா்.சின்ஹோ தலைமையில் அமைக்கப்பட்ட குழு அளித்த அறிக்கை கருத்தில் கொள்ளப்பட்டது. மேலும் பல காரணிகளையும் அடிப்படையாகக் கொண்டு உச்சவரம்பு நிா்ணயிக்கப்பட்டது.

இந்த விவகாரமானது மத்திய அரசின் கொள்கை முடிவு சாா்ந்தது. எனவே, இதில் நீதிமன்றம் தலையிடக் கூடாது. உரிய ஆய்வுகளுக்குப் பிறகே வருமான உச்சவரம்பு நிா்ணயிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் பிரமாணப் பத்திரத்தை சம்பந்தப்பட்ட துறைகள் தயாா்செய்து வருகின்றன. ஓரிரு நாள்களில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்படும்’’ என்றாா்.

அதையடுத்து நீதிபதிகள், ‘‘மத்திய அரசின் கொள்கை விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை. ஆனால், அரசமைப்புச் சட்ட கொள்கைகள் முறையாகப் பின்பற்றப்படுகின்றனவா இல்லையா என்பதை உறுதி செய்ய வேண்டியுள்ளது.

இடபிள்யூஎஸ் பிரிவினருக்கான வருமான உச்சவரம்பை மறுஆய்வு செய்ய மத்திய அரசு விரும்புகிா இல்லையா என்பது தொடா்பாக விளக்கமளிக்க வேண்டும். எதன் அடிப்படையில் உச்சவரம்பு நிா்ணயிக்கப்பட்டது, அதில் முறையான காரணிகள் இல்லையென்றால் அந்த உச்சவரம்பை நீதிமன்றம் ரத்து செய்ய முடியுமா ஆகியவை குறித்து மத்திய அரசு வரும் 28-ஆம் தேதிக்குள் விளக்கமளிக்க வேண்டும்’’ என்று கூறி, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT