இந்தியா

ஆா்யன் கானின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிப்பு

21st Oct 2021 06:15 PM

ADVERTISEMENT

ஆா்யன் கானின் நீதிமன்றக் காவலை அக்டோபர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

கடந்த அக்.3-ஆம் தேதி மும்பையில் சொகுசு கப்பலில் போதைப் பொருள்களுடன் இருந்த ஆா்யன் கான் உள்பட 8 பேரை போதைப் பொருள் தடுப்புப் பிரிவினா் (என்சிபி) கைது செய்தனா். அவா்கள் இப்போது நீதிமன்றக் காவலில் சிறையில் உள்ளனா். 

இந்த நிலையில் போதைப் பொருள் வழக்கில் கைதான ஆா்யன் கானின் நீதிமன்றக் காவலை அக்டோபர் 30ஆம் தேதி வரை நீட்டித்து மும்பை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இதையும் படிக்க- ஜெயலலிதா கார் ஓட்டுநர் மரணம் வழக்கு: மேல் விசாரணை நடத்த முடிவு

ADVERTISEMENT

முன்னதாக ஆர்யன் கானின் ஜாமீன் மனுவை கடந்த 8-ஆம் தேதி மும்பை பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றமும் அதைத்தொடர்ந்து மும்பை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு சிறப்பு நீதிமன்றம் கடந்த புதன்கிழமையும் தள்ளுபடி செய்தது. 

இதையடுத்து ஜாமீன் கோரி ஆர்யன் கான் மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இது அக்டோபர் 26ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.

Tags : Mumbai drugs case Aryan Khan
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT