இந்தியா

ஆமிர் கான் நடித்த விளம்பரம்; சர்ச்சையை கிளப்பும் பாஜக

21st Oct 2021 04:53 PM

ADVERTISEMENT

முன்னணி டயர் நிறுவனமாக உள்ள சீயட் லிமிடெட் நிறுவனம் சமீபத்தில்  விளம்பரம் ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், தெருக்களில் பட்டாசுக்களை வெடிக்க வேண்டாம் என நடிகர் ஆமிர் கான் அறிவுரை கூறியிருப்பது போல அமைந்துள்ளது என பாஜக எம்பி அனந்த்குமார் ஹெக்டே குறிப்பிட்டுள்ளார். விளம்பரத்திற்கு ஆட்சேபனை தெரிவித்த அனந்த்குமார் ஹெக்டே, சீயட் டயர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அனந்த் வர்தன் கோயங்காவுக்கு அக்டோபர் 14ஆம் தேதி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், "சமீபத்தில் வெளியான விளம்பரம் இந்துக்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியிருப்பதை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என கேட்டு கொள்கிறேன். எதிர்காலத்தில், உங்கள் நிறுவனம் இந்துக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

உங்கள் நிறுவனத்தின் சமீபத்திய விளம்பரத்தில், தெருக்களில் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது என மக்களுக்கு ஆமிர் கான் அறிவுறுத்துவது போல அமைந்துள்ளது. இது நல்ல செய்தியைத் தருகிறது. பொதுப் பிரச்னைகள் குறித்த உங்கள் அக்கறைக்கு பாராட்டுக்கள் தேவை. இது சம்பந்தமாக, சாலைகளில் மக்கள் எதிர்கொள்ளும் மற்றொரு பிரச்னைக்கு தீர்வு காணுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இந்தியாவில் உள்ள பல்வேறு நகரங்களில், போக்குவரத்து அதிகமுள்ள சாலைகளை இஸ்லாமியர்கள் மறித்து வழிபாடு மேற்கொள்வது வழக்கமாக உள்ளது. அந்த நேரத்தில் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் போக்குவரத்தில் சிக்கியதன் காரணமாக பெரும் உயிர் சேதம் ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT

பிரார்த்தனையின்போது மசூதிகளில் அமைக்கப்பட்ட மைக்குகளிலிருந்து உரத்த சத்தம் வெளிப்படுகிறது. அனுமதிக்கப்பட்ட வரம்புகளை மீறி ஒலிக்கப்படுகிறது. குறிப்பாக வெள்ளிக்கிழமைகளில், அதிக நேரத்திற்கு ஒலிக்கப்படுகிறது. இது பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு, ஓய்வு எடுப்பவர்கள், பல்வேறு நிறுவனங்களின் பணியாளர்கள், வகுப்பறையில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. 

இதையும் படிக்க'பாஜகவால் ஜம்மு-காஷ்மீர் பல ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிட்டது': மெகபூபா முப்தி விமரிசனம்

உண்மையில், இந்த பாதிக்கப்பட்டவர்களின் பட்டியல் மிக நீளமானது. ஒரு சிலரை மட்டுமே இங்கு குறிப்பிட்டுள்ளேன். பொது மக்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளில் நீங்கள் மிகவும் ஆர்வமாக இருப்பதாலும், நீங்களும் இந்து சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதாலும், பல நூற்றாண்டுகளாக இந்துக்களுக்கு அனுபவிக்கும் பாகுபாட்டை நீங்கள் உணர முடியும் என நினைக்கிறேன்" என்றார்.

 

Tags : Aamir Khan Crackers
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT