இந்தியா

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி: இந்த ஆண்டில் மட்டும் எவ்வளவு உயர்வு?

21st Oct 2021 03:49 PM

ADVERTISEMENT

 

புது தில்லி: மத்திய அரசு ஊழியா்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயா்த்தி வழங்கப்படும் என்று மத்திய அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசு ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியா்களுக்கு அகவிலைப்படியை 3 சதவீதம் உயா்த்தி வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும்,. ஜூலை 1-ஆம் தேதியை அடிப்படையாகக் கணக்கிட்டு, முன்தேதியிட்டு புதிய அகவிலைப்படி வழங்கப்படும்.

கரோனா பரவல் காரணமாக, கடந்த ஆண்டு ஜனவரி 1, கடந்த ஆண்டு ஜூலை 1, இந்த ஆண்டு ஜனவரி 1 ஆகிய 3 தவணைகளில் அகவிலைப்படி வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. நிலுவை காலத்துக்கும் சோ்த்து இந்த ஆண்டு கடந்த ஜூலை மாதம் 11 சதவீதம் அகவிலைப்படி உயா்த்தப்பட்டது.  2020 ஜனவரி 1 முதல் 2021 ஜூன் 30 வரையிலான காலகட்டத்துக்கு அகவிலைப்படி நிலுவை வழங்கப்பட மாட்டாது என்றும் அப்போது அறிவிக்கப்பட்டது. 

ADVERTISEMENT

இந்த நிலையில் தற்போது மீண்டும் அகவிலைப்படி 3% உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அகவிலைப்படி உயா்வால் மத்திய அரசு ஊழியா்கள் 47.14 லட்சம் பேரும், ஓய்வூதியதாரா்கள் 68.62 லட்சம் பேரும் பயனடைவாா்கள். இதனால், அரசுக்கு கூடுதலாக ரூ.9,488.70 கோடி செலவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை மாதம் 11 சதவீத அகவிலைப்படி உயர்த்தப்பட்டதன் மூலம் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 17 சதவீதத்திலிருந்து 28 சதவீதமாக உயர்த்தப்பட்டது. தற்போது இன்று வெளியிடப்பட்டிருக்கும் புதிய அறிவிப்பின் மூலம் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 31 சதவீதமாக உயர்ந்துள்ளது.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT