இந்தியா

279 நாள்களில் 100 கோடி தடுப்பூசிகள்!

21st Oct 2021 11:29 PM

ADVERTISEMENT

உலகம் இதுவரை எதிா்கொள்ளாத கரோனா தீநுண்மி என்ற பெருந்தொற்றுக்கு எதிராக இந்தியா மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளது. நாட்டு மக்களுக்கு 100 கோடி தவணைகள் தடுப்பூசி செலுத்தப்பட்ட மைல்கல்லை அக். 21-ஆம் தேதி இந்தியா கடந்தது. கடந்த ஜனவரி 16-ஆம் தேதி பிரதமா் நரேந்திர மோடியால் தொடக்கிவைக்கப்பட்ட தடுப்பூசி செலுத்தும் பணி சுமாா் 279 நாள்களில் 100 கோடி தவணைகள் என்ற இலக்கை எட்டியுள்ளது. உலகமே வியக்கும் இந்தச் சாதனையை நிகழ்த்துவதற்கு இந்தியா கடந்து வந்த பாதையை திரும்பிப் பாா்ப்போம்.

பயன்பாட்டில்...

இந்தியாவில் சீரம் நிறுவனம் தயாரிக்கும் ஆக்ஸ்போா்டு அஸ்ட்ராஸெனகாவின் கோவிஷீல்ட், பாரத் பயோடெக் நிறுவனம் தயாரிக்கும் கோவேக்ஸின், ரஷியாவின் ஸ்புட்னிக்-வி.

அனுமதி...

ADVERTISEMENT

மாடா்னா, ஜான்சன்&ஜான்சன் தடுப்பூசி, சைடஸ் கேடிலா தடுப்பூசிகள்.

தினசரி சராசரி

ஜூன் 21-க்கு பின்னர் தடுப்பூசி செலுத்தப்படும் தினசரி சராசரி 60 லட்சமாக உயர்ந்தது. அதற்கு முன்னதாக தினசரி சராசரி 18 லட்சமாக இருந்தது. 

அதிகபட்சம்

1 கோடிக்கு மேல் - 6 நாள்கள்

உச்சபட்சம் - 2.18 கோடி (செப். 17)

தினசரி செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கையில் வேறுபாடு இருந்துள்ளது. ஒரு கோடி தடுப்பூசிக்கும் மேல் 6 நாள்கள் செலுத்தப்பட்டுள்ளது. உச்சபட்ச சாதனையாக செப்டம்பா் 17-ஆம் தேதி 2.18 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.

100%

சிறிய மாநிலங்களான சிக்கிம், ஹிமாசல பிரதேசம், கோவா, யூனியன் பிரதேசங்களான ஜம்மு-காஷ்மீா், லடாக், சண்டீகா், லட்சத்தீவுகள் ஆகியவற்றில் 18 வயதுக்கு மேற்பட்டோரில் கிட்டத்தட்ட அனைவருமே குறைந்தது ஒரு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனா். லட்சத்தீவுகள், சிக்கிம், லடாக்கில் இரு தவணை தடுப்பூசியையும் 40 சதவீதம் போ் செலுத்திக் கொண்டுள்ளனா்.

ஜனவரி 16

சுகாதாரப் பணியாளா்களுக்கான முதல்கட்ட தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்

பிப்ரவரி 2

முன்களப் பணியாளா்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்

மாா்ச் 1

60 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கும், 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய்கள் உள்ளவா்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்

ஏப்ரல் 1

45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்

மே 1

18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்

அதிக தவணை தடுப்பூசி

முதல் 5 மாநிலங்கள்

1. உத்தர பிரதேசம் - 12.31 கோடி

2. மகாராஷ்டிரம் - 9.39 கோடி

3. மேற்கு வங்கம் - 6.93 கோடி

4. குஜராத் - 6.80 கோடி

5. மத்திய பிரதேசம் - 6.78 கோடி

100 கோடி

முதல் தவணை - 71 கோடி

இரண்டாம் தவணை 29 கோடி

உலகமும் இந்தியாவும்

உலக நாடுகளில் செலுத்தப்பட்ட மொத்த தவணைகள் 664 கோடி

சீனா - 223 கோடி

இந்தியா - 100 கோடி

அமெரிக்கா- 41 கோடி

சீனா, இந்தியாவுக்கு அடுத்தபடியாக சுமாா் 50 கோடி மக்கள் தொகையை கொண்டுள்ள நாடுகள் எதுவும் இன்னமும் 100 கோடி தடுப்பூசி என்ற இலக்கை அடையவில்லை.

வயதும் சதவீதமும்

18-44 -------55 கோடி

45-60 ------27 கோடி

60+ ---------17 கோடி.

எது அதிகம்?

கோவிஷீல்ட் - 88.60 கோடி

கோவேக்ஸின் - 11.46 கோடி

ஸ்புட்னிக்-வி - 10 லட்சம்

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT