இந்தியா

புதிதாக கேரள மாநில விருதுகள்: முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு

20th Oct 2021 08:00 PM

ADVERTISEMENT

பத்ம விருதுகளைப் போன்று கேரளத்தில் மூன்று புதிய விருதுகள் நடப்பாண்டு முதல் வழங்கப்படும் என முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

கேரளத்தில் சிறந்த நபர்களுக்கு மத்திய அரசின் பத்ம விருதுகளைப் போல் மாநில அளவில் உயர்ந்த விருதுகள் வழங்க புதன்கிழமை நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | கேரள நிலச்சரிவில் சிக்கி 42 பேர் பலி: பினராயி அறிவிப்பு

கேரள விருதுகள் என அழைக்கப்படும் இந்த விருதுகள்  'கேரள ஜோதி', 'கேரளா பிரபா' மற்றும் 'கேரள ஸ்ரீ' ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழங்கப்படும் எஅ முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இதையும் படிக்க | கர்நாடகத்தில் புதிதாக 462 பேருக்கு கரோனா தொற்று

மாநில அரசின் சார்பில் வழங்கப்பட உள்ள இந்த விருது கேரள தினமான ஆண்டுதோறும் நவம்பர் 1ஆம் தேதி வழங்கப்பட உள்ளது. கேரள ஜோதி விருது ஆண்டுக்கு ஒருவருக்கும், கேரள பிரபா விருது ஆண்டுக்கு இருவருக்கும், கேரள ஸ்ரீ விருது ஆண்டுக்கு ஐந்து பேருக்கும் வழங்கப்படும் எனவும் முதன்மை மற்றும் இரண்டாம் நிலை குழுக்கள் பரிந்துரைக்குப் பின் இந்த விருதுகள் வழங்கப்படும் என மாநில அரசு தெரிவித்துள்ளது.

Tags : kerala Pinarayi Vijayan
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT