இந்தியா

கேரளத்தில் மீண்டும் 11 ஆயிரத்தைத் தாண்டியது தினசரி கரோனா பாதிப்பு

DIN


கேரளத்தில் புதிதாக 11,150 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரளத்தில் கடந்த 14-ம் தேதி முதல் தினரசி பாதிப்பு 10 ஆயிரத்துக்குக் கீழ் பதிவாகி வந்தது. இந்த நிலையில் மீண்டும் புதன்கிழமை 11,150 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 48,70,584 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 82 பேர் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 27,084 ஆக உயர்ந்துள்ளது. 8,592 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 47,69,373 பேர் குணமடைந்துள்ளனர்.

இன்றைய நிலவரப்படி 82,738 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 94,151 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் 41 பேர் வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்கள். 348 பேருக்கு எவ்வாறு நோய்த் தொற்று ஏற்பட்டது என்பது இன்னும் கண்டறியப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆல்-ரவுண்டர்களின் நிலைமை ஆபத்திலிருக்கிறது: கவலை தெரிவித்த அக்‌ஷர் படேல்!

அருணாசலில் நிலச்சரிவு: தேசிய நெடுஞ்சாலை துண்டிப்பு

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

SCROLL FOR NEXT