இந்தியா

அருணாச்சல் எல்லையில் பீரங்கிகளைக் குவித்த இந்தியா

20th Oct 2021 06:41 PM

ADVERTISEMENT

சீனா உடனான அருணாச்சல் எல்லைப் பகுதியில் பீரங்கிகளை மத்திய அரசு குவித்துள்ளது.

இந்தியா-சீனா இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்னை நிலவி வருகிறது. இருதரப்பினரிடையே அவ்வப்போது பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தாலும் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகின்றது.

இதையும் படிக்க | நேபாளத்தில் கனமழை பாதிப்பு: பலி எண்ணிக்கை 48ஆக உயர்வு

இந்நிலையில் கடந்த வாரம் அருணாச்சலப் பிரதேசத்திற்கு அரசுமுறைப் பயணமாக துணைக் குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு சென்றிருந்தார். இடாநகரில் உள்ள சட்டப்பேரவையிலும் அவர் உரையாற்றினார். இதற்கு சீனா கடுமையான எதிர்ப்பு தெரிவித்தது. 

ADVERTISEMENT

சீனாவின் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த இந்திய வெளியுறவுத் துறை அந்நாட்டின் வெளியுறவுத் துறையின் கருத்தை நிராகரிப்பதாக கண்டனம் தெரிவித்தது. 

இதையும் படிக்க | இன்ஸ்டாகிராமில் அறிமுகமாகிறது புதிய வசதிகள்

இந்நிலையில் அருணாச்சலப் பிரதேசத்தின் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப்பகுதியான தாவங் பகுதியில் இந்திய ராணுவம் பீரங்கிகளைக் குவித்துள்ளது. இதனால் இருதரப்பு எல்லைப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுவரை சீனா-இந்தியா இடையே 13 கட்டப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : India China
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT