இந்தியா

ஜாமீன் மனு: மும்பை உயர் நீதிமன்றத்தில் ஆர்யன் கான் மேல்முறையீடு

20th Oct 2021 08:14 PM

ADVERTISEMENT


பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் ஜாமீன் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

சொகுசுக் கப்பலில் தடை செய்யப்பட்ட போதைப் பொருளைப் பயன்படுத்தியதாக ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட மூன்று பேர் கடந்த 3-ம் தேதி கைது செய்யப்பட்டனர். அவர்கள் தற்போது நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிக்கஷாருக் கான் மகனுக்கு பிணை வழங்க மறுப்பு

இதையடுத்து, அவருடன் கைது செய்யப்பட்ட மூவரும் மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்தனர். அவருக்கு ஜாமீன் வழங்க போதைப் பொருள் தடுப்புப் பிரிவு எதிர்ப்பு தெரிவித்தது.

ADVERTISEMENT

இதைத் தொடர்ந்து, மும்பை சிறப்பு நீதிமன்றம் ஆர்யன் கான் உள்ளிட்ட மூவரின் ஜாமீன் மனுவை புதன்கிழமை தள்ளுபடி செய்தது. 

இந்த நிலையில், ஜாமீன் கோரி ஆர்யன் கான் மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இது வியாழக்கிழமை விசாரணைக்கு வருகிறது.

Tags : Aryan Khan
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT