இந்தியா

கேரள நிலச்சரிவில் சிக்கி 42 பேர் பலி: பினராயி அறிவிப்பு

20th Oct 2021 07:41 PM

ADVERTISEMENT

 

கேரளத்தில் தொடர் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 42 பேர் உயிரிழந்துள்ளதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது, நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவில் நிவாரண நிதி வழங்கப்படும் என்று கூறினார்.

நிலச்சரிவில் சிக்கியுள்ள மேலும், ஆறு பேரை தேடும் பணி நடைபெற்று வருவதாகக் குறிப்பிட்ட அவர், மழைக்காலத்தில் கடினமான சூழலை எதிர்கொள்ளும் குடும்பங்களுக்கு அரசு துணை நிற்கும் என்று உறுதியளித்தார்.

ADVERTISEMENT

படிக்க அருணாச்சல் எல்லையில்இந்திய பீரங்கிகள்: எல்லையில் பதற்றம்

தொடர் மழை காரணமாக சட்டப்பேரவையில் அக்டோபர் 25-ஆம் தேதி வரை முதல்வர் உரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அந்தந்த தொகுதிகளில் பிரதிநிதிகள் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளதாகக் கூறினார். 

காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக பல்வேறு பகுதிகளில் கடந்த 11-ஆம் தேதி முதல் மழை பெய்து வருகிறது. வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளிலிலிருந்து 3,851 பேர் 304 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 

தொடர் மழையால் 217 வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளது. 1,393 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளது என்று கூறினார். 

Tags : kerala Rain Pinarayi Vijayan land slide
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT