இந்தியா

பஞ்சாப்: காவல்துறை அதிகாரியின் கார் மோதியதில் பெண் பலி; ஒருவர் படுகாயம்

DIN


சண்டிகர்: பஞ்சாப் மாநில காவல்துறை ஆய்வாளர் மிக வேகமாக ஓட்டி வந்த கார், சாலையைக் கடக்க சாலையோரம் நின்றிருந்த இரண்டு பெண்கள் மீது தூக்கி வீசியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மற்றொருவர் படுகாயமடைந்தார்.

ஜலந்தர் - பக்வாரா தேசிய நெடுஞ்சாலையில், தானேவாலி கிராமத்துக்கு அருகே, சாலையைக் கடக்க இரண்டு பெண்களும் சாலையோரம் நின்றிருந்த போது, அவர்களை வேகமாக வந்த கார் தூக்கி வீசியது. ஒருவர் தூக்கிவீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியாக, மற்றொருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

உயிரிழந்த பெண் நவ்ஜோத் கௌர் என்பதும், உள்ளூரில் உள்ள கார் விற்பனைக் கடையில் பணியாற்றி வந்ததும் தெரிய வந்துள்ளது.

விபத்தை ஏற்படுத்திய கார் அம்ரித் பால் சிங் ஓட்டி வந்தது என்பதும், அவர் பஞ்சாப் காவல்துறையில் ஹரிகே பட்டன் பகுதியில் காவல் ஆய்வாளராக பணியாற்றி வருவதும் தெரிய வந்துள்ளது. விபத்தை ஏற்படுத்தியதற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விபத்தைக் கண்டித்து உள்ளூர் மக்கள் நடத்திய சாலை மறியல் போராட்டத்தால் அங்கு பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சம்பவம் நடந்த இடத்திலிருந்து சிசிடிவி காட்சியில் விபத்து நடந்தது பதிவாகியுள்ளது. அதில், இரண்டு பெண்கள் சாலையைக் கடக்க சாலையோரம் நிற்கிறார்கள். ஒரு கார் வேகமாக தங்களை நோக்கி வருவதைப் பார்த்ததும் சற்று பின்வாங்கி நிற்கிறார்கள். அப்போது அங்கே மிக வேகமாக வந்த வெள்ளை நிற கார், கண்ணிமைக்கும் நேரத்தில் சாலையைக் கடக்க காத்திருந்த இரண்டு பெண்கள் மீது மோதுகிறது. அதில் ஒரு பெண் தூக்கி வீசப்பட்டு, சாலைத் தடுப்பின் மீது விழுந்து சரிகிறாள். மற்றொரு பெண் இங்கேயே தூக்கி வீசப்படுகிறார்.  இந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பலராலும் பகிரப்பட்டு, கடும் விமரிசனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

SCROLL FOR NEXT