இந்தியா

மகாராஷ்டிரம்: சிறைக்கைதிகள் 20 பேருக்கு கரோனா

18th Oct 2021 04:06 PM

ADVERTISEMENT

மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த கல்யானில் உள்ள ஆதர்வாடி சிறைச்சாலையில் 20 கைதிகளுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.

நாடு முழுவதும் கரோனாவின் தாக்கம் குறைந்து வரும் நிலையில் மகாராஷ்டிரத்தின் கல்யானில் உள்ள ஆதர்வாடி சிறைச்சாலையில் இருக்கும் கைதிகளில் 20 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.

தற்போது அம்மாநிலத்தில் தினசரி தொற்று பாதிப்பு 2,000க்கு கீழ் குறைந்து வருகிற வேளையில் சிறையில் பாதிப்பு ஏற்பட்டதால் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மேலும் தொற்றில் பாதிக்கப்பட்ட கைதிகள் தானே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

ADVERTISEMENT

Tags : covid maharashtra vaccine
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT