இந்தியா

கேரளம்: கனமழையால் 27 பேர் பலி

18th Oct 2021 12:19 PM

ADVERTISEMENT

கேரளத்தில் பெய்து வரும்  கனமழையால் இதுவரை  27 பேர் பலியாகியிருக்கிறார்கள்.

கேரளத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளித்து வருகிறது. முக்கியமாக திருவனந்தபுரம், கோட்டயம், பத்தனம்திட்டா, இடுக்கி, கொல்லம்  மாவட்டங்களில் அதிகப்படியான மழை பதிவாகியுள்ளதால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது.

இதையும் படிக்க| ஜம்மு - காஷ்மீர் வளர்ச்சித் திட்டங்கள்: துபை அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

இந்நிலையில் அப்பகுதிகளில் இதுவரை கனமழை காரணமாக உருவான வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி 27 பேர் பலியாகியிருப்பதாக அம்மாநில அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ADVERTISEMENT

குறிப்பாக இடுக்கி மாவட்டத்தின் பல பாலங்கள் நீரில் மூழ்கியிருப்பதால் பேரிடர் மீட்புப்குழுவினர் அப்பகுதி மக்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்துச் சென்றனர்.

மேலும் கனமழையால் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என மீட்புப்படையினர் தெரிவித்திருக்கிறார்கள்.

Tags : heavy rain flood died
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT