இந்தியா

தெலங்கானா அருகே பேருந்தில் பயங்கர தீ: 26 பயணிகள் தப்பியது எப்படி?

18th Oct 2021 12:59 PM

ADVERTISEMENT

ஜான்கோன்: சட்டீஸ்கர் மாநிலத்திலிருந்து ஹைதராபாத் நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து, இன்று அதிகாலை திடீரென தீப்பற்றி எறிந்தது. நல்வாய்ப்பாக அதிலிருந்து ஓட்டுநர் உள்பட 26 பயணிகளும் உயிர் தப்பினர்.

வாரங்கல் - ஹைதராபாத் தேசிய நெடுஞ்சாலையில் தெலங்கானாவின் புறநகர்ப் பகுதியான ரகுநாதபள்ளி கிராமத்தில் இன்று அதிகாலை இந்த பயங்கர தீ விபத்து நேரிட்டது.

பேருந்து வேகமாக இயக்க முடியாமல், மெதுவாகச் சென்று கொண்டிருந்ததைக் கவனித்த ஓட்டுநர், திடீரென பேருந்தின் எஞ்ஜினிலிருந்து கருகும் வாசனை வந்ததும், அனைத்துப் பயணிகளும் உடைமைகளை எடுத்துக் கொண்டு பேருந்திலிருந்து இறக்குமாறு எச்சரிக்கை விடுத்தார்.

அனைவரும் பேருந்திலிருந்து இறங்கிய சிறிது நேரத்திலேயே, பேருந்து வெடித்து தீப்பிழம்பாகி முற்றிலும் எரிந்து நாசமானது.

ADVERTISEMENT

உடனடியாக காவல்துறையினருக்கும், தீயணைப்புத் துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

ஓட்டுநரின் சாமர்த்தியத்தால், பயணிகள் எந்த பாதிப்பும் இல்லாமல் உயிர் தப்பினர்.
 

Tags : Hyderabad Telangana bus bursts
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT