இந்தியா

சபரிமலை செல்ல அக்.21 வரை பக்தர்களுக்கு அனுமதி இல்லை

18th Oct 2021 12:21 PM

ADVERTISEMENT

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வருகின்ற அக்டோபர் 21ஆம் தேதி வரை பக்தர்கள் செல்ல அனுமதி இல்லை என அமைச்சர் கே.ராஜன் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.

கேரள பஞ்சாங்கப்படி, துலா மாதம் (ஐப்பசி) பிறப்பையொட்டி அக்டோபர் 17 முதல் 21ஆம் தேதி வரை சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், கேரளத்தில் கடந்த இரண்டு நாள்களாக பெய்து வரும் கனமழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அக்.17-ல் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

நாளைமுதல் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், வெள்ள அபாயம் தொடர்வதால் அக்.21 வரை பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என அமைச்சர் கே.ராஜன் இன்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இதையும் படிக்க | கேரளம்: கனமழையால் 27 பேர் பலி

அதனைத் தொடர்ந்து பக்தா்கள் அக்டோபா் 17 முதல் 21-ஆம் தேதி வரை சாமி தரிசனத்துக்காக அனுமதிக்கப்பட உள்ளனர். இணையவழியில் முன்னதாகவே முன்பதிவு செய்த பக்தா்கள் மட்டுமே தரிசனத்துக்காக சந்நிதானத்தில் அனுமதிக்கப்பட உள்ளனர்.

மேலும், சந்நிதானம் நடை அக்டோபா் 21-இல் அடைக்கப்படவுள்ளதால். சித்திரை ஆட்டவிசேஷத்தை முன்னிட்டு மீண்டும் நவம்பா் 2-ஆம் தேதி நடை திறக்கப்பட்டு, அடுத்த நாள் நடையடைக்கப்படும். அதன் பிறகு மண்டல-மகரவிளக்கு பூஜைக்காக நவம்பா் 15-ஆம் தேதி தான் நடை திறக்கப்படும்.

Tags : Sabarimalai Kerala flood
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT