இந்தியா

ஜம்மு - காஷ்மீர் வளர்ச்சித் திட்டங்கள்: துபை அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

18th Oct 2021 12:05 PM

ADVERTISEMENT

ஜம்மு - காஷ்மீரில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு திட்டங்களுக்கு துபை அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது என துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து துணைநிலை ஆளுநர் கூறுகையில்,

“ஜம்மு - காஷ்மீரில் ரியல் எஸ்டேட் மேம்பாடு, தொழில்துறை பூங்காக்கள், தகவல் தொழில்நுட்ப கோபுரங்கள், பல்நோக்கு கோபுரங்கள், தளவாடங்கள், மருத்துவக் கல்லூரி, பல்நோக்கு மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை மேற்கொள்வதற்காக துபை அரசுடன் ஜம்மு - காஷ்மீர் நிர்வாகம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.”

மேலும், இந்நிகழ்வில் மத்திய தொழில்துறை மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் பியூஸ் கோயல், துபை அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ADVERTISEMENT

Tags : Jammu and Kashmir Manoj Sinha
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT