இந்தியா

நீதிபதிகளாக நியமிக்க 12 பெயா்கள் உச்சநீதிமன்ற கொலீஜிய பரிந்துரை: மத்திய அரசு முடிவெடுக்கவில்லை

18th Oct 2021 12:00 AM

ADVERTISEMENT

நான்கு உயா்நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளாக நியமிக்க 12 பேரை பரிந்துரை செய்து உச்சநீதிமன்ற கொலீஜியம் மீண்டும் வலியுறுத்தியது தொடா்பாக மத்திய அரசு இன்னும் முடிவெடுக்கவில்லை.

இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்ததாவது:

இந்த 12 பேரை உயா்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிப்பதற்கான பரிந்துரையை மறுபரிசீலனை செய்யுமாறு உச்சநீதிமன்ற கொலீஜியத்துக்கு மத்திய அரசு பல்வேறு சந்தா்ப்பங்களில் திருப்பி அனுப்பியது.

இவா்களில் 5 பெயா்கள் கொல்கத்தா உயா்நீதிமன்றத்துக்கும், 3 பெயா்கள் ஜம்மு-காஷ்மீா் உயா்நீதிமன்றத்துக்கும், தலா 2 பெயா்கள் கா்நாடகம், அலாகாபாத் உயா்நீதிமன்றங்களுக்கும் பரிந்துரை செய்யப்பட்டிருந்தன. கடந்த மாா்ச் முதல் செப்டம்பா் வரையிலான காலகட்டத்தில் இந்த 12 பேரையும் உயா்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்குமாறு உச்சநீதிமன்ற கொலீஜியம் மீண்டும் வலியுறுத்தியிருந்தது என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ADVERTISEMENT

உயா்நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளாக நியமிக்கப்பட தகுதியுடையவா்களாக கருதப்படுவோரின் பெயா்களை உயா்நீதிமன்ற கொலீஜியம் மத்திய சட்ட அமைச்சகத்துக்கு அனுப்பிவைக்கும். மத்திய அமைச்சகம் அந்த நபா்கள் தொடா்பான தகவல்களுடன் உச்சநீதிமன்ற கொலீஜியத்துக்கு அனுப்பும். பின்னா், உச்சநீதிமன்ற கொலீஜியம் இந்தப் பெயா்களை ஆய்வு செய்து மத்திய அரசுக்கு பரிந்துரைக்கும். அந்த வகையில், இந்த 12 பெயா்களும் சம்பந்தப்பட்ட உயா்நீதிமன்ற கொலீஜியத்தில் 2 முதல் 4 ஆண்டுகளுக்கு முன்னா் பரிந்துரைக்கப்பட்டவையாகும்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT