இந்தியா

கனமழை, நிலச்சரிவு: கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் பிரதமர் பேச்சு

17th Oct 2021 07:22 PM

ADVERTISEMENT

கனமழை மற்றும் நிலச்சரிவு நிலவரம் குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயனிடம், பிரதமர் நரேந்திர மோடி கேட்டறிந்தார். 

இதுகுறித்து அவர் தனது சுட்டுரையில், ‘‘கேரளத்தில் கனமழை மற்றும் நிலச்சரிவு நிலவரம் குறித்து கேரள முதல்வர் பினராய் விஜயனுடன் ஆலோசித்தேன். காயம் அடைந்தவர்களுக்கும் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் களத்தில் உள்ள அதிகாரிகள் உதவி வருகின்றனர். அனைவரின் பாதுகாப்பு மற்றும் நலனுக்காக பிரார்த்திக்கிறேன்.

இதையும் படிக்க- தமிழகத்தில் இன்று புதிதாக 1,218 பேருக்கு கரோனா 

கேரளத்தில் கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக சிலர் உயிரிழந்தது வருத்தம் அளிக்கிறது. உறவினர்களை இழந்த குடும்பங்களுக்கு இரங்கல்கள்’’  என்று பிரதமர் கூறியுள்ளார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT