இந்தியா

பஞ்சாபில் வியூகம் அமைத்த சித்து; 13 பிரச்னைகளை சுட்டிக்காட்டி சோனியாவுக்கு கடிதம்

17th Oct 2021 02:23 PM

ADVERTISEMENT

 பஞ்சாபில் அரசு நிரவாகத்தில் உள்ள பல்வேறு பிரச்னைகள் குறித்து அம்மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து சோனியா காந்திக்கு கடிதம் எழுதியுள்ளார். அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு நடத்தப்படவுள்ள பரப்புரைக்கான 13 அம்ச கோரிக்கை குறித்து அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அக்டோபர் 14ஆம் தேதி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் கே. சி. வேணுகோபால் ஆகியோரை சந்தித்து தனது ராஜிநாமா முடிவை திரும்பபெற்றார்.

முன்னதாக, மாநில தலைவர் பதவியை அவர் ராஜிநாமா செய்திருந்தார். பின்னர், அக்டோபர் 15ஆம் தேதி, கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியுள்ளார். 

அதை இன்று ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார். தான் எழுப்பிய முக்கிய பிரச்னைகளுக்கு முதல்வர் சரண்ஜீத் சிங் சன்னி தீர்வு காணும்படி காங்கிரஸ் தலைவர் உத்தரவிட வேண்டும் என சித்து கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT

பல்வேறு பிரச்னைகள் சுட்டிக்காட்டி எழுதிய கடிதத்தில், "தீமையிலிருந்து மீண்டெழந்து காப்பாற்றிக் கொள்ள இது பஞ்சாப் மாநிலத்திற்கு கிடைத்த கடைசி வாய்ப்பு. பஞ்சாப் ஒரு காலத்தில் நாட்டின் செல்வ வளம் மிக்க மாநிலமாக இருந்தது. தற்போது, கடனில் மூழ்கியுள்ளது.

மதத்தை அவமதித்த விவகாரம், போதை பொருள் விவகாரம், வேளாண் பிரச்னைகள், வேலைவாய்ப்பு, மணல் கொள்ளை, பிற்படுத்தப்பட்ட சாதிக்கான நலத்திட்டங்கள், மின்சாரம், போக்குவரத்து, நெருக்கடி உள்ளிட்ட பிரச்னைகளுக்கு விரைவாக தீர்வு காண வேண்டும்.

இதையும் படிக்கநேதாஜிக்கும், வல்லபபாய் படேலுக்கும் பல்லாண்டுகளாக உரிய மரியாதை கிடைக்கவில்லை: அமித் ஷா

மாநிலத்தை ஆபத்திலிருந்து காப்பாற்ற இது கடைசி வழிமுறை. பாதல்களின் ஆதரவோடு மாநிலத்தை மாஃபியாக்கள் ஆட்சி செய்துவருகின்றனர். இது, பஞ்சாப்பை நிதி நெருக்கடி, வேலையின்மை, ஊழல் மற்றும் விவசாய நெருக்கடி நிலைக்கு கொண்டு செல்லும். அதிலிருந்து திரும்பி வர முடியாது.

எனவே, தயவுசெய்து இந்த கோரிக்கைகளை தயவுசெய்து பரிசீலித்து, பஞ்சாப் மக்களின் நலன்களுக்காக உடனடியாக செயல்பட மாநில அரசுக்கு உத்தரவிடும்படு கேட்டு கொள்கிறேன். இந்த 13 அம்ச கோரிக்கை குறித்து பேச நேரில் சந்திக்க நேரம் அளிக்குமாறு கேட்டு கொள்கிறேன்" என்றார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT