இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளால் மேலும் 2 தொழிலாளர்கள் சுட்டுக்கொலை

17th Oct 2021 07:51 PM

ADVERTISEMENT

ஜம்மு-காஷ்மீரின் குல்காமில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 2 பேர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர். 
ஜம்மு-காஷ்மீரின் குல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 2 பேர் பலியானார்கள். மேலும் ஒரு தொழிலாளி காயமடைந்தார். இச்சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதிக்கு காவல்துறையினர் மற்றும் பாதுகாப்புப் படையினர் விரைந்தனர். 

இதையும் படிக்க- கனமழை, நிலச்சரிவு: கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் பிரதமர் பேச்சு

பயங்கரவாத தாக்குதலுக்கு ஆளான தொழிலாளர்கள் 3 பேரும் பிகாரைச் சேர்ந்தவர்கள். நேற்று 2 தொழிலாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் இன்று மீண்டும் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் மேலும் 2 தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர். 
ஜம்மு-காஷ்மீரில் கடந்த 2 வாரங்களில் மட்டும் பொதுமக்கள் 11 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT