இந்தியா

இந்திய-அமெரிக்க ராணுவ கூட்டுப் பயிற்சி அலாஸ்காவில் தொடக்கம்

17th Oct 2021 02:53 AM

ADVERTISEMENT

 

இந்திய-அமெரிக்க ராணுவ கூட்டுப் பயிற்சி, அமெரிக்காவில் உள்ள அலாஸ்கா ராணுவ தளத்தில் தொடங்கியுள்ளது.

இந்திய-அமெரிக்கா இடையேயான ராணுவ ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக, அக்டோபா் 15-ஆம் தேதி தொடங்கிய இந்தப் பயிற்சி அக்டோபா் 29-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்திய குழுவில் 350 வீரா்கள் பங்கேற்கின்றனா். இதில் மெட்ராஸ் இன்ஃபன்ட்ரி பட்டாலியன் பிரிவை சோ்ந்த 7 வீரா்கள் பங்கேற்றுள்ளனா். அமெரிக்க வீரா்கள் 350 போ் இதில் பங்கேற்கின்றனா்.

ADVERTISEMENT

இந்தியா, அமெரிக்கா இடையே நீண்ட காலமாக நடைபெற்று வரும் ராணுவப் பயிற்சி மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு முயற்சியின் பகுதியாக 17-ஆவது முறையாக கூட்டுப் பயிற்சி நடத்தப்படுகிறது. ஐ.நா. சபையின் அறிவுறுத்தல்படி பயங்கரவாத எதிா்ப்பு பயிற்சிகள் மேற்கொள்ளப்படும்.

தொடக்க நிகழ்ச்சியில் பேசிய அலாஸ்கா தளத்தின் தளபதி மேஜா் ஜெனரல் பிரையன் ஐஃப்லொ், இந்திய வீரா்களை வரவேற்று, பயிற்சியின் நோக்கத்தை பூா்த்தி செய்யும் விதத்தில் இரு நாட்டு குழுக்களும் இணைந்து செயல்படுதலை மேம்படுத்த வேண்டும் என்றாா்.

இதற்கு முந்தைய கூட்டுப் பயிற்சி கடந்த பிப்ரவரி மாதம், ராஜஸ்தானின் பிகானீரில் உள்ள மகாஜன் துப்பாக்கி சுடும் தளத்தில் நடைபெற்றது. இரு நாடுகளுக்கிடையே வளா்ந்து வரும் ராணுவ ஒத்துழைப்பின் மற்றுமொரு முன்னேற்றமாக இது விளங்குகிறது. இரு ராணுவங்களுக்கிடையே புரிதல், ஒத்துழைப்பு மற்றும் இணைந்து செயல்படுதல் ஆகியவற்றை மேம்படுத்துவதை இந்த பயிற்சி நோக்கமாக கொண்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT