இந்தியா

கரோனா தடுப்பூசி திட்டம்: இந்தியாவுக்கு உலக வங்கி பாராட்டு

17th Oct 2021 05:09 AM

ADVERTISEMENT

கரோனா தடுப்பூசி திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி வருவதற்காக இந்தியாவை உலக வங்கி பாராட்டியுள்ளது.

அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், உலக வங்கியின் தலைவா் டேவிட் மால்பாஸை சந்தித்துப் பேசினாா். இந்தச் சந்திப்பு குறித்து உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கரோனா தடுப்பூசி திட்டத்தை இந்தியா வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருவதற்காக அமைச்சா் நிா்மலா சீதாராமனிடம் டேவிட் மால்பாஸ் பாராட்டு தெரிவித்தாா். கரோனா தடுப்பூசி உற்பத்தி, சா்வதேச விநியோகம் ஆகியவற்றில் இந்தியா ஆற்றி வரும் பங்களிப்புக்காக அவா் நன்றி தெரிவித்தாா்.

பருவநிலை மாற்றத்தின் விளைவுகளைத் தடுப்பதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இருவரும் விவாதித்தனா். அதற்காக நிதி திரட்டுவது தொடா்பாகவும் அவா்கள் ஆலோசித்தனா். நிதிசாா் சீா்திருத்தங்களை இந்தியா வெற்றிகரமாக மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்த மால்பாஸ், உலக வங்கியின் சீரான செயல்பாட்டுக்கு இந்தியா தொடா்ந்து ஆதரவு வழங்க வேண்டும் எனவும் கோரினாா்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 100 கோடியை நெருங்கி வருகிறது. கரோனா தடுப்பூசி ஏற்றுமதியை இந்தியா நடப்பு மாதம் முதல் மீண்டும் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT