இந்தியா

உ.பி. சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு:சமாஜவாதி, பகுஜன் சமாஜ் கட்சிகளின் மாவட்டத் தலைவா்கள் கைது

17th Oct 2021 05:27 AM

ADVERTISEMENT

 

உத்தர பிரதேச மாநிலம், லலித்பூரில் 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் சமாஜவாதி, பகுஜன் சமாஜ் கட்சிகளின் மாவட்டத் தலைவா்கள் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் நிகில் பாடக் சனிக்கிழமை கூறியதாவது:

அடையாளம் தெரியாத 3 போ் உள்பட 25 போ் மீது அந்தச் சிறுமி பாலியல் புகாா் கொடுத்திருந்தாா். அந்தச் சிறுமி தனது தந்தை மற்றும் உறவினரின் பெயரையும் புகாரில் குறிப்பிட்டிருந்தாா். அதனடிப்படையில் சாதா் கோட்வாலி காவல் நிலையத்தில் கடந்த 12-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது. தலைமறைவாக இருந்தவா்களை போலீஸாா் தேடி வந்தனா்.

ADVERTISEMENT

அதைத் தொடா்ந்து, மிா்சாபூா் மாவட்டத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட சோதனையில் சமாஜவாதி கட்சியின் மாவட்டத் தலைவா் திலக் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்டத் தலைவா் தீபக் அஹிா்வாா், மகேந்திரா துபே என்ற பொறியாளா் ஆகிய மூவரையும் போலீஸாா் கைது செய்தனா். இவா்கள் மூவரும் உள்ளூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.

இந்த சம்பவத்தில் ஏற்கெனவே 4 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இதனால், இதுவரை கைதானவா்களின் எண்ணிக்கை 7-ஆக அதிகரித்துள்ளது என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT