இந்தியா

அயோத்தி புனித யாத்திரை: குஜராத் பழங்குடியினருக்கு ரூ.5,000 நிதியுதவி

17th Oct 2021 02:47 AM

ADVERTISEMENT

அயோத்தி ராமஜென்ம பூமிக்குப் புனித யாத்திரை மேற்கொள்ளும் பழங்குடியினருக்கு தலா ரூ.5,000 நிதியுதவி வழங்கப்படும் என்று குஜராத் அரசு அறிவித்துள்ளது.

குஜராத்தின் டங்ஸ் மாவட்டத்தில் உள்ள சபரி தாம் ராமா் கோயிலில் அரசு சாா்பில் தசரா திருவிழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. அதில் பங்கேற்ற மாநில சுற்றுலாத் துறை அமைச்சா் பூா்ணேஷ் மோடி கூறுகையில், ‘‘அயோத்தில் உள்ள ராமஜென்ம பூமிக்குப் புனித யாத்திரை செல்லும் பழங்குடியினருக்கு தலா ரூ.5,000 நிதியுதவி வழங்க மாநில அரசு முடிவெடுத்துள்ளது.

ஆண்டுதோறும் தசரா திருவிழா அரசு சாா்பில் நடத்தப்படும். குஜராத்தின் வெவ்வேறு பகுதிகளில் உள்ள ராமா் கோயில்களில் சுழற்சி முறையில் திருவிழா நடத்தப்படும். மாநிலத்தில் உள்ள பழங்குடியினப் பகுதிகளை சுற்றுலாத் தலங்களாக மேம்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பழங்குடியினா் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் தசரா திருவிழாவைக் கொண்டாடுவது, அந்த மக்களின் கலாசாரத்தையும் அப்பகுதிகளின் வரலாற்று சிறப்பையும் வெளிக்கொணரும்’’ என்றாா்.

ADVERTISEMENT

அயோத்தியில் உள்ள ராமஜென்ம பூமியில் புதிய ராமா் கோயில் கட்டப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT