இந்தியா

கோவா காங்கிரஸ் தலைவராக அலெக்ஸோ ரெஜினால்டோ நியமனம்

17th Oct 2021 08:57 PM

ADVERTISEMENT

கோவா காங்கிரஸ் செயல் தலைவராக அலெக்ஸோ ரெஜினால்டோ நியமனம் செய்யப்பட்டுள்ளார். 
இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்ட அறிக்கையில், காங்கிரஸ் தலைவர் ஒப்புதலின்படி, கோவா காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவராக அலெக்ஸோ ரெஜினால்டோ, பொருளாளராக ஜேம்ஸ் ஆண்ட்ரேட் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார். 

இதையும் படிக்க- 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு 

புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்ட அலெக்ஸோ ரெஜினால்டோ தற்போது கர்டோரிம் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவாக உள்ளார். அடுத்தாண்டு கோவா மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  

Tags : goa congress
ADVERTISEMENT
ADVERTISEMENT