இந்தியா

மன்மோகன் சிங்குக்கு டெங்கு காய்ச்சல்; குணமடைந்து வருகிறார்: எய்ம்ஸ்

16th Oct 2021 02:40 PM

ADVERTISEMENT

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு டெங்கு காய்ச்சல் பாதித்திருப்பது மருத்துவப் பரிசோதனையில் தெரிய வந்திருப்பதாகவும், அவரது உடல்நிலை மெல்ல சீரடைந்து வருகிறது, அபாயக் கட்டத்தை தாண்டிவிட்டார் என எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் (89)காய்ச்சல் மற்றும் உடல்சோா்வு காரணமாக கடந்த புதன்கிழமை மாலை தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

உலக உணவு நாள் சிறப்புக் கட்டுரை: பிரியாணியும் பழைய சோறும்

அவரது உடலில் ரத்தத் தட்டுக்கள் மெல்ல அதிகரித்து வருவதாகவும், அபாயக் கட்டத்தைத் தாண்டிவிட்டதாகவும் எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்ட மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மன்மோகன் சிங்குக்கு கடந்த திங்கள்கிழமை காய்ச்சல் ஏற்பட்டது. அதிலிருந்து மீண்ட அவா், உடல் சோா்வாக இருப்பதாக தெரிவித்தாா். அதைத் தொடா்ந்து புதன்கிழமை மாலை தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு ஏற்கெனவே இதய அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால், அது தொடா்பான பரிசோதனையும் அவருக்கு நிபுணா்களால் மேற்கொள்ளப்பட்டது. இப்போது, அவரது உடல்நிலை சீராகவும், முன்பைவிட மேம்பட்டுள்ளதாகவும் எய்ம்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா, மருத்துவமனைக்குச் சென்று மன்மோகன் சிங் உடல்நலம் குறித்து விசாரித்தார்.

கடந்த ஏப்ரலில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மன்மோகன் சிங், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்தார்.
 

Tags : Dengue AIIMS டெங்கு மன்மோகன் சிங் manmohan singh
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT