இந்தியா

பாலியல் வன்கொடுமைக்குள்ளான மாற்றுத்திறனாளி; கரும்பை வாங்கி தருவதாக அழைத்து சென்று கொடூரம்

16th Oct 2021 05:53 PM

ADVERTISEMENT

கர்நாடக தட்சிணா கன்னடம் மாவட்டம் புட்டூர் தாலுகாவில் மன நல குறைபாடுள்ள 20 வயதே ஆன மாற்றுத்திறனாளி அதே கிராமத்தை சேர்ந்த ஒருவரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து புட்டூர் காவல்துறையினர் கூறுகையில், "பாதிக்கப்பட்டவர் கபாகா கிராமத்தை சேர்ந்தவர். வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு வெளியே நடைபயிற்சி மேற்கொண்டார்.

வீடு திரும்பியபோது, பாதிக்கப்பட்டவரின் ஆடை சேற்றில் நனைந்திருப்பதை அவரின் தந்தை பார்த்துள்ளார். இதுகுறித்து தந்தை அவரிடம் கேட்டுள்ளார். அப்போது, முகமது ஹனீப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக பாதிக்கப்பட்டவர் தெரிவித்துள்ளார். 

முகமது ஹனீப் அந்த தந்தைக்கு தெரிந்தவர்தான். கரும்பு வாங்கி தருகிறேன் என ஆசை காண்பித்து பாதிக்கப்பட்டவரை  குற்றம்சாட்டப்பட்ட ஹனீப் முரா ரயில் தண்டவாளம் அருகே அழைத்து சென்றுள்ளார். அங்கிருக்கும் புதருக்கு அழைத்து சென்ற பாலியல் வன்கொடுக்கு உள்ளாக்க முயற்சித்தார். அப்போது, பாதிக்கப்பட்டவர் மறுக்கவே, அவரை தாக்கியுள்ளார். பின்னர், அவரை வற்புறுத்தி பாலியன் வன்புணர்வு செய்துள்ளார்.

இதையும் படிக்கநீதிமன்றத்தில் சாக்குபோக்கு; திருமண நிகழ்ச்சிகளில் ஆட்டம் பாட்டம்.. பாஜக எம்பி பிரக்யா சிங் தாகூர்

ADVERTISEMENT

சம்பவ இடத்திலிருந்து பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி தப்பித்த போதிலும், பாலியல் வன்கொடுமை குறித்து வெளியே தெரிவித்தால் கொலை செய்துவிடுவேன் என குற்றம்சாட்டப்பட்டவர் மிரட்டியுள்ளார்" என்றார். ஹனீப் மீது காவல்துறையினர் பல்வேறு வழக்குகளை பதிவு செய்துள்ளனர். 
 

Tags : Karnataka rape
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT