இந்தியா

இந்தியாவில் இன்று மேலும் 15,981 பேருக்கு கரோனா; 166 பேர் பலி

16th Oct 2021 10:09 AM

ADVERTISEMENT

இந்தியாவில் இன்று மேலும் 15,981 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 15,981 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3.40 கோடியாக உயர்ந்துள்ளது. 
இன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 166 போ் கரோனாவால் உயிரிழந்துவிட்டனா். இதனால் மொத்த உயிரிழப்பு 4,51,980 ஆக உயா்ந்துள்ளது. கரோனாவிலிருந்து இன்று 17,861 போ் குணமடைந்துள்ளனா். இதுவரை 3,33,99,961 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். 

இதையும் படிக்க- சிறையில் இருந்து இன்று விடுதலையாகிறார் சுதாகரன்

கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவா்களின் எண்ணிக்கை 2,01,632 ஆக உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 8,36,118 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதுவரை 97,23,77,045 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 
நேற்று ஒரேநாளில் 9,23,003 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. இதுவரை மொத்தம் 58,98,35,258 கரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT