இந்தியா

தில்லியில் புதிதாக 21 பேருக்கு கரோனா

16th Oct 2021 07:05 PM

ADVERTISEMENT


தில்லியில் புதிதாக 21 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிதாக உயிரிழப்புகள் ஏற்படவில்லை.

தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் 0.04 சதவிகிதமாகப் பதிவாகியுள்ளது. அக்டோபர் மாதத்தில் 2 மற்றும் 10 ஆகிய தேதிகளில் தலா உயிரிழப்புகள் பதிவாகின. இதன்பிறகு, உயிரிழப்புகள் ஏற்படவில்லை. மொத்த பலி எண்ணிக்கை 25,089 ஆக உள்ளது.

இதையும் படிக்கதமிழகத்தில் புதிதாக 1,233 பேருக்கு கரோனா தொற்று

மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 14,39,358 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 14.13 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 

ADVERTISEMENT

இதனால், நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 327-இல் இருந்து 326 ஆகக் குறைந்துள்ளது.

சனிக்கிழமை நிலவரப்படி 96 பேர் வீட்டுக் கண்காணிப்பில் உள்ளனர். இது வெள்ளிக்கிழமை 104 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. அதேசமயம், நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளும் 104-இல் இருந்து 99 ஆகக் குறைந்துள்ளது.

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT