இந்தியா

பிளிப்கார்ட்டில் முன்பதிவு செய்த தொலைக்காட்சி நடிகர்; விநியோகிக்கப்பட்ட அட்டைப்பெட்டியை பார்த்து அதிர்ச்சி

16th Oct 2021 02:30 PM

ADVERTISEMENT

மகாராஷ்டிராவைச் சேர்ந்த தொலைக்காட்சி நடிகரான பராஸ் கல்நாவட், பிளிப்கார்ட் தளத்தில் நத்திங் நிறுவனத்தன் இயர்ஃபோனை ஆர்டர் செய்துள்ளார். 

இந்நிலையில், அவருக்கு விநியோகிக்கப்பட்ட அட்டைபெட்டி காலியாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

 இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில், "பிளிப்கார்ட் தளத்தில் நத்திங் நிறுவனத்தின் இயர்ஃபோனை ஆர்டர் செய்திருந்தேன். வந்த அட்டைபெட்டியில் எதுவுல் இல்லை.

மிகவும் மோசமான ஆன்லைன் ஷாப்பிங் தளமாக பிளிப்கார்ட் மாறிவிட்டது. மக்கள் கூடிய விரைவில் அதில் பொருள்கள் வாங்குவதை நிறுத்தப்போகிறார்கள்" என பதிவிட்டுள்ளார்.

ADVERTISEMENT


இவரின் பதிவுக்கு பிளிப்கார்ட் நிறுவனம் உடனடியாக பதில் அளித்துள்ளது. அந்நிறுவனம், "இதை கேட்டு வருந்துகிறோம். ஆர்டர் குறித்து உங்களது வருத்தத்தை புரிந்துகொள்கிறோம். உங்களுக்கு உதவ தயாராக இருக்கிறோம். ஆர்டர் ஐடியை பகிரவும்" என தெரிவித்துள்ளது.

இதையும் படிக்ககாங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் தொடங்கியது


பராஸ் கல்நாவட் இட்ட ட்விட்டர் பதிவில், இதுபோன்று தங்களுக்கு நிகழ்ந்த மோசமான அனுபவங்கள் குறித்து பலர் கருத்து பதிவிட்டுவருகின்றனர்.

Tags : flipkart Paras Kalnawat
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT