இந்தியா

13 லட்சம் குடிநீர் மாதிரிகளை பரிசோதித்ததில் கிடைத்த அதிர்ச்சித் தகவல்

16th Oct 2021 03:12 PM

ADVERTISEMENT


புது தில்லி: அரசின் திட்டத்தின் கீழ், நாடு முழுவதுமுள்ள 13 லட்சம் குடிநீர் மாதிரிகளை பரிசோதித்ததில், 1.11 லட்சம் குடிநீர் மாதிரிகள் மாசடைந்தவை என்பது தெரிய வந்துள்ளதாக புள்ளி விவரம் வெளியாகியுள்ளது.

மத்திய அரசின் குடிநீர் பரிசோதனை மற்றும் ஆய்வுத் திட்டத்தின் கீழ் 13 லட்சம் குடிநீர் மாதிரிகள் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன.

இயற்கையாகக் கிடைக்கும் குடிநீரும் இந்த பரிசோதனையில் சோதனைக்கு உள்படுத்தப்பட்டதில், அவற்றிலும் ஆர்செனிக், ஃப்ளோரைட், இரும்பு, யுரேனியம் உள்ளிட்ட ரசாயனங்கள் கலந்திருந்ததாகவும், நிலத்தில் உரம் தெளிப்பது, பூச்சிக் கொல்லி மருந்துகள் போடுவது, கழிவுகளை கொட்டுவது போன்றவற்றால், நிலத்திலேயே ரசாயனங்கள் கலந்து, இயற்கையாகக் கிடைக்கும் குடிநீரிலும் ரசாயனங்கள் கலந்திருப்பதாக ஜல் சக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உலோக உற்பத்தி அல்லது சையனைடு போன்ற ரசாயன ஆலைகளுக்கு அருகிலிருக்கும் நீர்நிலைகளில் கூட மாசுபாடு ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ஒட்டுமொத்தமாக 13,17,028 குடிநீர் மாதிரிகள் ஆய்வகத்துக்கு அனுப்பி சோதித்ததில், 1,11,474 மாசடைந்தவை என்பது தெரிய வந்துள்ளது. குடிநீர் மாதிரிகள் பரிசோதனையில் தோல்வியடைந்தால், அதிகாரிகள் இது குறித்து ஆன்லைன் மூலம் தகவல் அளித்து, அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 

Tags : water samples drinking water
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT