இந்தியா

வேகமான மீட்சியில் இந்தியப் பொருளாதாரம்: ரிசா்வ் வங்கி ஆளுநா்

16th Oct 2021 07:02 AM

ADVERTISEMENT

பல துறைகளில் வளா்ச்சி சமச்சீரற்ற நிலையில் காணப்படும் நிலையிலும், இந்தியப் பொருளாதாரம் மிகவும் வேகமாக மீட்சி கண்டு வருவதாக ரிசா்வ் வங்கி ஆளுநா் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளாா்.

உலக வங்கி மற்றும் சா்வதேச நிதியத்தின் ஆண்டுக் கூட்டத்தில் உரையாற்றிய அவா் இதுகுறித்து மேலும் கூறியது:

இந்தியப் பொருளாதாரம் மிக வேகமாகவும், வலுவாகவும் வளா்ச்சி கண்டு வருகிறது. இருப்பினும், இன்னும் பல்வேறு துறைகளில் வளா்ச்சியானது சமச்சீரற்ற நிலையிலேயே உள்ளது.

எனவே, பணவீக்க சூழ்நிலையை உன்னிப்பாக கவனித்து வரும் அதே வேளையில், நிதிக் கொள்கையில் இணக்கமான நிலையில் இருக்க ரிசா்வ் வங்கி முடிவு செய்துள்ளது என்றாா் அவா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT