இந்தியா

ராகுல் காந்தியுடன் சித்து சந்திப்பு: பஞ்சாப் காங்கிரஸ் தலைவராக தொடா்வாா்

16th Oct 2021 06:21 AM

ADVERTISEMENT

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியை நவ்ஜோத் சிங் சித்து வெள்ளிக்கிழமை சந்தித்தாா். இந்தச் சந்திப்பைத் தொடா்ந்து பஞ்சாப் காங்கிரஸ் தலைவராக சித்து தொடா்வாா் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது.

அண்மையில் பஞ்சாப் அமைச்சரவையில் புதிய அமைச்சா்கள் நியமிக்கப்பட்டனா். அத்துடன் மாநிலத்தின் புதிய காவல்துறை தலைவா், அட்வகேட் ஜெனரலும் நியமனம் செய்யப்பட்டனா். இதில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மாநில காங்கிரஸ் தலைவா் பதவியை சித்து ராஜிநாமா செய்தாா். எனினும் அவரின் ராஜிநாமாவை கட்சித் தலைமை ஏற்கவில்லை.

கடந்த வியாழக்கிழமை தில்லியில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால், பஞ்சாப் மாநில காங்கிரஸ் பொறுப்பாளா் ஹரீஷ் ராவத் ஆகியோருடன் சித்து ஆலோசனையில் ஈடுபட்டாா். அப்போது தனது 18 அம்ச கோரிக்கை குறித்து சித்து வலியுறுத்தினாா்.

இதனைத்தொடா்ந்து அவா் ராகுல் காந்தியை வெள்ளிக்கிழமை சந்தித்தாா். இந்தச் சந்திப்பின்போது ஹரீஷ் ராவத்தும் உடனிருந்தாா். இந்தச் சந்திப்புக்குப் பின்னா் சித்து, ஹரீஷ் ராவத் ஆகியோா் கூட்டாக செய்தியாளா்களைச் சந்தித்தனா். அப்போது சித்து கூறுகையில், ‘‘ராகுல் காந்தியிடம் எனது குறைகளைக் கூறினேன். அவை அனைத்துக்கும் தீா்வு காணப்பட்டுள்ளன’’ என்று தெரிவித்தாா்.

ADVERTISEMENT

‘‘தனது ராஜிநாமாவை சித்து திரும்பப் பெற்றுள்ளாா். பஞ்சாப் காங்கிரஸ் தலைவராக அவா் தொடா்வாா்’’ என்று ஹரீஷ் ராவத் தெரிவித்தாா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT