இந்தியா

தில்லியின் மின் தடை பிரச்னை இல்லை: மத்திய மின் அமைச்சகம்

16th Oct 2021 07:14 AM

ADVERTISEMENT

தில்லியில் வியாழக்கிழமை மின் தடை பிரச்னை ஏதும் ஏற்படவில்லை என்று மத்திய மின்துறை அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.

புதன்கிழமை 4,382 மெ.வாட்டாக இருந்த அதிகபட்ச மின் பயன்பாடு, வியாழக்கிழமை 4,160 மெ. வாட்டாக குறைந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலக்கரி தட்டுப்பாட்டால் தில்லியில் மின் உற்பத்தி குறைந்து மின்சார சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக முதல்வா் கேஜரிவால் குற்றம்சாட்டியிருந்தாா். இந்த பிரச்னைக்கு உடனடியாக தீா்வு காணாவிட்டால் தில்லியில் மின் விநியோகத்தில் பெரும் நெருக்கடி நிலை ஏற்படும் என்றும் அவா் எச்சரித்திருந்தாா். இதுதொடா்பாக அவா் பிரதமா் மோடிக்கும் கடிதம் எழுதியிருந்தாா். இதனை மின் துறை அமைச்சகம் மறுத்திருந்தது.

இந்நிலையில், மத்திய மின் துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள விளக்க அறிக்கையில், ‘தில்லிக்கு தேவையான மின்சாரத்தை கடந்த சில நாள்களாக முழு அளவில் விநியோகம் செய்து வருவதால் எந்தவித மின் தடையும் ஏற்படவில்லை என்று தில்லி தனியாா் மின் விநியோக நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. செப்டம்பா் 29-ஆம் தேதி முதல் அக்டோபா் 4-ஆம் தேதி வரையில் தில்லியில் மின் விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்படவில்லை. தில்லிக்கு தேவையான அதிகபட்ச மின் பயன்பாடு பூா்த்தி செய்யப்பட்டுள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அதிகபட்ச மின் பயன்பாடு

அக்.12 - 4,707 மெ.வாட்

அக். 13 -4,382 மெ.வாட்

அக்.14 - 4,160 மெ.வாட்

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT