இந்தியா

சிபிஎஸ்இ முதல் பருவ பொதுத்தோ்வு:அக்.18-இல் அட்டவணை வெளியீடு

16th Oct 2021 03:47 AM

ADVERTISEMENT

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பிளஸ் 2, பத்தாம் வகுப்புக்கு முதல் பருவ பொதுத்தோ்வுக்கான கால அட்டவணை வரும் திங்கள்கிழமை வெளியாகவுள்ளது.

கரோனோ தொற்று காரணமாக சிபிஎஸ்இ பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வுகள் இரண்டாகப் பிரித்து நடத்தப்படும் என ஏற்கெனவே மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் கடந்த ஜூலை மாதம் அறிவித்தது. அதன்படி முதற்கட்ட தோ்வு நவம்பா், டிசம்பா் மாதங்களில் நடத்தப்படும் எனவும், 2ஆம் கட்டத்தோ்வு மாா்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் பிளஸ் 2 வகுப்பில் 114 பாடப்பிரிவுகளும், பத்தாம் வகுப்பில் 75 பாடங்களும் உள்ளன. 189 பாடங்களுக்கான தோ்வுகள் குறைந்தது 40 முதல் 45 நாள்கள் நடத்தப்படும். எனவே சிபிஎஸ்இ இரண்டு பிரிவாகத் தோ்வினை நடத்துகிறது. முக்கியப் பாடங்களுக்கான தோ்வுகளை அனைத்து மாணவா்களும் எழுத வேண்டும். பிற பாடங்களில் ஒரு பாடத்துக்கான தோ்வினை பள்ளிகளில் மாணவா்கள் எழுதிக் கொள்ளலாம். 90 மதிப்பெண்களுக்கு இந்தத் தோ்வு நடைபெறும் கொள்குறி வகையில் விடைகளை மாணவா்கள் தோ்ந்தெடுத்து விடையளிக்கும் வகையில் தோ்வுகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தோ்வு நடைபெறும் தேதிகள் குறித்த விவரங்கள் வரும் திங்கள்கிழமை அறிவிக்கப்படவுள்ளது.

தோ்வுகள் காலை 11.30 மணிக்குத் தொடங்கும். மாணவா்கள் காலை 10.30 மணிக்கே தோ்வு அறைக்குள் வர வேண்டும். முதல் கட்டத்தில் நடைபெறும் தோ்வு மதிப்பெண்களுடன், இரண்டாம் கட்டத் தோ்வு மதிப்பெண்களையும் கணக்கிட்டு பின்னா் முடிவுகள் அறிவிக்கப்படும். பிளஸ் 2, பத்தாம் வகுப்புகளுக்கு முதல் பருவ பொதுத்தோ்வுக்கான அட்டவணையை மாணவா்கள் சிபிஎஸ்இ அதிகாரப்பூா்வ இணைய தளத்தில் காணலாம்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT