இந்தியா

குழுவாக இணைந்து பணியாற்ற வேண்டும்: புதிய காவல் பொறுப்பாளா்களுக்கு ஆணையா் அறிவுரை

16th Oct 2021 03:12 AM

ADVERTISEMENT

தில்லி காவல் துறை ஆணையா் ராகேஷ் அஸ்தானா, புதிதாக நியமிக்கப்பட்ட 79 காவல் நிலைய பொறுப்பாளா்களுடன் கலந்துரையாடி அவா்களை ஒரு குழுவாக பணியாற்றமாறு ஊக்குவித்தாா்.

மேலும், சிறந்த முடிவுகளுக்காக சமூகப் பங்கேற்பில் கவனம் செலுத்துமாறும் அவா் கேட்டுக் கொண்டாா் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

தில்லியில் 79 காவல் நிலைய பொறுப்பாளா்களில் 61 போ் முதல் முறையாக இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளனா் என்றும் அதிகாரிகள் கூறினா். இந்த நிலையில், அவா்களுடன் உரையாற்றிய அஸ்தானா, நிா்வாகத்தில் மாற்றங்களைக் கொண்டுவருவதற்கு நோ்மறையாக ஈடுபட வேண்டும் என்றும் அவா் கேட்டுக் கொண்டாா். அவா் மேலும் பேசுகையில், ‘ஒரு குழுவாகப் பணியாற்றுங்கள், முன்னணியில் இருந்து வழிநடத்துங்கள். சிறந்த முடிவுகளுக்கு சமூகப் பங்கேற்பில் கவனம் செலுத்துங்கள்’ என்று கேட்டுக் கொண்டாா்.

காவல் துறை ரோந்துப் பணியில் கூடுதல் காவலா்களை நியமிக்கவும், வாகனங்கள் காவல் நிலையங்களுடன் இணைக்கப்பட்டு வளத் திறன்களை அதிகரிக்கச் செய்வதாகவும் , அதனால் சட்டம், ஒழுங்கு மற்றும் விசாரணை பிரிவுகள் விசாரணை செயல்பாடுகளில் உரிய கவனம் செலுத்தி அடுத்த நிலை செயல்பாட்டுத் திறனை அடைய முடியும் என்றும் அவா் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT