இந்தியா

நாட்டில் 7 மாதங்களுக்குப் பின் குறைந்த கரோனா நோயாளிகள் எண்ணிக்கை

9th Oct 2021 11:05 AM

ADVERTISEMENT


புது தில்லி: நாட்டில் இன்று காலையுடன் நிறைவு பெற்ற 24 மணி நேரத்தில் புதிதாக 19,740 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுளள்து. இதன் மூலம், கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 2,36,643 ஆக உள்ளது.

நாட்டில் சுமார் 6 மாதங்களுக்குப் பின் அதாவது 206 நாள்களுக்குப் பின், கரோனா நோயாளிகள் எண்ணிக்கை இந்த அளவுக்குக் குறைந்திருப்பது இதுவே முதல் முறை.

கரோனா நிலவரம் குறித்த புள்ளி விவரங்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது.

அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் 23,070 பேர் கரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். இதையடுத்து, இதுவரை ஒட்டுமொத்தமாக கரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 3,32,48,291 ஆக உயர்ந்துள்ளது. கரோனாவிலிருந்து குணமடைவோர் விகிதம் 97.98 சதவீதமாக உள்ளது.

ADVERTISEMENT

நேற்று ஒரே நாளில் 12,69,291 கரோனா பரிசோதனை செய்யப்பட்டுளள்து. வாராந்தோறும் கரோனா உறுதியாகும் விகிதம் 1.62 சதவீதமாக உள்ளது. சுமார் 106 நாள்களாக கரோனா உறுதியாகும் விகிதம் 3 சதவீதத்துக்குள் உள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT