இந்தியா

லக்கீம்பூர் வன்முறை: மத்திய அமைச்சரின் மகன் ஆசிஷ் மிஸ்ரா ஆஜர்

9th Oct 2021 10:57 AM

ADVERTISEMENT


லக்கீம்பூர் கெரியில் விவசாயிகள் மீது கார் ஏற்றி 4 விவசாயிகள் பலியான வழக்கு விசாரணைக்காக, மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன்  ஆசிஷ் மிஸ்ரா லக்கீம்பூர் குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராகியுள்ளார்.

லக்கீம்பூா் கெரியில் நடைபெற்ற வன்முறை சம்பவம் தொடா்பான விசாரணைக்கு காவல்துறையினர் அனுப்பிய முதல் சம்மனுக்கு மத்திய உள்துறை இணையமைச்சா் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா ஆஜராகாத நிலையில், மீண்டும் சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், இன்று காலை விசாரணைக்காக குற்றப்பிரிவு அலுவலகத்தில் நேரில் ஆஜராகியுள்ளார்.

இதையும் படிக்கலாமே.. லக்கீம்பூா் வன்முறை: உரிய ஆதாரமின்றி நடவடிக்கை எடுக்க முடியாது; உ.பி. முதல்வா் யோகி ஆதித்யநாத்

இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது. விசாரணையின் இறுதியில் அவர் கைது செய்யப்படலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

ADVERTISEMENT

லக்கீம்பூா் வன்முறையில் 8 போ் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக ஆசிஷ் மிஸ்ரா உள்பட பலா் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடா்பான விசாரணைக்கு வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு ஆஜராகுமாறு ஆசிஷ் மிஸ்ராவுக்கு காவலர்கள் சம்மன் அனுப்பியிருந்தனா். ஆனால், அவா் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதையடுத்து அவா் சனிக்கிழமை காலை 11 மணிக்குள் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று அஜய் குமாா் மிஸ்ராவின் வீட்டில் போலீஸாா் நோட்டீஸ் ஒட்டியிருந்தனர்.

இதுகுறித்து லக்னெளவில் மத்திய இணையமைச்சா் அஜய் மிஸ்ரா செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘எனது மகன் உடல்நலத்துடன் இல்லை. எனவே, அவா் விசாரணைக்கு ஆஜராவதை தவிா்த்தாா். அவா் சனிக்கிழமை ஆஜராகி தனது வாக்குமூலத்தையும் தன்னிடம் உள்ள ஆதாரத்தையும் வழங்குவாா்’’ என்று தெரிவித்தாா்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT