இந்தியா

கேரளத்தில் 10 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த கரோனா பாதிப்பு

9th Oct 2021 07:49 PM

ADVERTISEMENT

கேரளத்தில் ஒரேநாளில் 9,470 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் 88,310 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. அவற்றில் புதிதாக 9,470 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.  
அதிகபட்சமாக எர்ணாகுளத்தில் 1,337 பேரும், திருவனந்தபுரத்தில் 1,261 பேரும், திரிச்சூரில் 930 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 47,84,109 ஆக உயர்ந்துள்ளது. கரோனாவால் இன்று மேலும் 101 பேர் பலியானார்கள். 

இதையும் படிக்க- பிக்பாஸில் இந்த காரணத்தால் நமிதா வெளியேறினாரா ? : பரவும் தகவல்

இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 26,173 ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 1,13,132 சிகிச்சையில் உள்ளனர். கரோனாவிலிருந்து இன்று 12,881 பேர் குணமடைந்தனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 46,44,211 ஆக உயர்ந்துள்ளது. 
பல்வேறு மாவட்டங்களில் 3,66,250 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT